-
‘பெரியார் உலக’த்திற்காக – தமிழர் தலைவர் ஆசிரியரின் எடைக்கு எடை நாணயத்திற்கான தொகை வழங்கினர் (சேலம், 6.2.2026)
சேலம் மாவட்டக் கழகம் சார்பில், பெரியார் உலகத்திற்காக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கினர். மொத்த தொகை ரூ.43,350. உடன் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் (சேலம், 6.2.2026) The post ‘பெரியார் உலக’த்திற்காக – தமிழர் தலைவர் ஆசிரியரின் எடைக்கு எடை நாணயத்திற்கான தொகை வழங்கினர் (சேலம், 6.2.2026) appeared first on Viduthalai Daily Newspaper.
-
பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டி எடப்பாடியில் கழகத் தலைவர் உரை!
பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கென்று தனிப் பெட்டி கேட்டனர்! வெள்ளையர்கள் ஏற்க மறுத்து சமத்துவத்தை உருவாக்கினார்கள்! சமத்துவத்தை வளர்த்தெடுக்கத்தான் திராவிடர் இயக்கம் பிறந்தது! எடப்பாடி, பிப்.8 ‘‘பிரிட்டீசார் முதன் முதலில் ரயிலைக் கொண்டு வந்தபோது, பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கென்று தனிப் பெட்டி கேட்டனர்? வெள்ளையர்கள் ஏற்க மறுத்து சமத்துவத்தை உருவாக்கினார்கள்! சமத்துவத்தை வளர்த்தெடுக்கத்தான் திராவிடர் இயக்கம் பிறந்தது’’ என்று பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 The post பார்ப்பனியத்தின் கொடுமையை ஒழித்துக் கட்டும் பணியில் திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டி எடப்பாடியில் கழகத் தலைவர் உரை! appeared first on Viduthalai Daily Newspaper.
-
சமூகநீதிக்குச் சாவு மணியா? பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு!
புதுடில்லி, ஜன.8 தகுதியானவர்கள் இல்லை என்று கூறி மண்ணின் மைந்தர்க ளுக்கான வேலையை தட்டிப்பறிக்கும் சூழ்ச்சி நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் நடக்கிறது தகுதியானவர்கள் ஒருவர்கூட இல்லையா? அலகாபாத் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனப் பட்டியலில் அதிர்ச்சி! பிரயாக்ராஜ்: இந்தியாவின் பழை மையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலைக்கழகம் (University of Allahabad), அண்மையில் பல்வேறு துறைகளுக்கான பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசி ரியர் பணி நியமனப் பட்டியலை வெளியிட்டது. இதர The post சமூகநீதிக்குச் சாவு மணியா? பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு! appeared first on Viduthalai Daily Newspaper.
-
சபரிமலையில் அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு – மோசடி! கோயில் அர்ச்சகப் பார்ப்பான் (தந்திரி) கைது இல்லை – பதவி நீக்கமாம்!
சபரிமலை அய்யப்பன் கோயிலில் தங்கம் திருட்டுப் போன மோசடி வழக்கில் சிக்கிய கோயில் தலைமை அர்ச்சகப் பார்ப்பனர் (தந்திரி) கண்டரரு ராஜீவர் சட்டப்படி கைது செய்யப்படவில்லை. மாறாக, திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு, திருட்டில் சம்பந்தப்பட்ட அர்ச்சகப் பார்ப்பனரை, அர்ச்சகர் பொறுப்பிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாம்! இது எப்படி இருக்கு? The post சபரிமலையில் அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு – மோசடி! கோயில் அர்ச்சகப் பார்ப்பான் (தந்திரி) கைது இல்லை – பதவி நீக்கமாம்! appeared first on Viduthalai Daily Newspaper.
-
இது ஒரு தினமலர் செய்தி ஆர்.எஸ்.எஸ். அதிரடி முடிவு ; உதறலில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள்
புதுடில்லி, பிப்.8 தேர்தலில் தொடர் தோல்வி அடைந்தும், மீண்டும் போட்டியிடத் துடிக்கும் பா.ஜ.க., நிர்வாகிகளுக்கு வேட்டு வைக்கும் முடிவை, ஆர்.எஸ்.எஸ்., மேலிடம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, பா.ஜ.க., டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்களவை சட்டமன்றத் தேர்தலில், வேட்பாளராக குறிப்பிட்ட சிலருக்கு தான், மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு பெரும் செலவை, டில்லி மேலிடம் செய்கிறது. தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும், பா.ஜ.க. வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் பொருளாதாரமும் பல மடங்கு உயர்கிறது. The post இது ஒரு தினமலர் செய்தி ஆர்.எஸ்.எஸ். அதிரடி முடிவு ; உதறலில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் appeared first on Viduthalai Daily Newspaper.