• தமிழ்நாடு அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

    சென்னை, நவ.13 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி. லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் (பிஎச்.டி), முனைவர் பட்ட மேலாய்வாளர் (PostDoctoral Fellow) போன்ற வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ‘தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்’ என்ற சிறப்புத் திட்டத்தை 2024–-2025ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியது.  இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். குடும்ப ஆண்டு The post தமிழ்நாடு அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Viduthalai Daily Newspaper.

  • பெரியார் பெயரை கேட்டாலே ஆர் எஸ் எஸ் அலறுவது ஏன்?

    ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, சங்பரிவார் போன்ற இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நிற்க வேண்டும் என்றால் பெரியார் அதற்கு நிச்சயம் தேவை. தந்தை பெரியார் சிலையாக நிற்கவில்லை நம் கருத்துகளாக நிற்கிறார். பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் இவர்களின் கருத்துகளை எடுத்துக் கொண்டு நாம் களம் காண வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஜாதி, மதங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்ற வரை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பெரியார் தேவைப்படுகிறார். சிலையாக நிற்கும் அவரையே இன்றும் உதைக்கிறாங்க, உடைக்கிறாங்க, காவிச் சாயம் The post பெரியார் பெயரை கேட்டாலே ஆர் எஸ் எஸ் அலறுவது ஏன்? appeared first on Viduthalai Daily Newspaper.

  • ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம்

    சென்னை, நவ.13  அரசுப் பள்ளி ஆசிரியர்களில் ஊதிய முரண்பாடு களை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை விவரத்தில் கூறியி ருப்பதாவது: பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் இணை இயக்குநர்கள், அலுவலர்களுக்கான பணி பொறுப்புகள் மாற்றப்பட்டு ஆசிரியர்கள், பணியாளர்களின் ஊதிய முரண்பாடு சார்ந்த கருத்துருவை நிதிக்கட்டுப்பாடு அலுவலரின் நிர்வாக பொறுப்பில் செயல்படுத்த ஆணையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊதிய முரண்பாடு சரிசெய்தல் சார்ந்த பணிகளை The post ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம் appeared first on Viduthalai Daily Newspaper.

  • சிறந்த முறையில் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு விருது காரைக்குடி விழாவில் நாளை வழங்கப்படுகிறது

    சென்னை, நவ. 13 தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) சிறந்த முறையில் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளை (14.11.2025) நடைபெறவுள்ள விழாவில் கேடயங்கள் வழங்கப்படவுள்ளன. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தொடக்கக்கல்வி துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் 2024-2025-ஆம் கல்வி The post சிறந்த முறையில் செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு விருது காரைக்குடி விழாவில் நாளை வழங்கப்படுகிறது appeared first on Viduthalai Daily Newspaper.

  • சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்டனர்

    சென்னை, நவ.13  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏ.அய்.அய்.பி.) பிரதிநிதிகள் குழு, விரைவில் வரவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைப் பார்வையிட்டனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏ.அய்.அய்.பி.) பிரதிநிதிகள் குழு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், வரவிருக்கும் மெட்ரோ திட்டங்களை பார்வையிடுவதற்காக, 2025 நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சென்னைக்கு வருகை தந்தனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்களுடன், (ஏ.அய்.அய்.பி.) The post சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பார்வையிட்டனர் appeared first on Viduthalai Daily Newspaper.