அறிவுரைஇனமானம், தன் மானத்திலும் பெரிது; உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோகத் தடாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராசா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய்க் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததன் பெரு நோக்கமாகும். – தந்தை பெரியார்