Date

28 Oct 2024
Expired!
location-pin

Location

ஆசனூர்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோபி கழக மாவட்டம் சார்பில் மலைவாழ் மக்களுக்கு (பொது ) மருத்துவ முகாம் !

நாள்: 17.11.2024 இடம்: ஆசனூர்

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2மணி வரை
மருத்துவ வசதி இல்லாத மலை வாழ் மக்களுக்கு பெரியார் மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஆய்வாளர்கள் நோயறியும் மாபெரும் மருத்துவ முகாம்!
26.10.2024 அன்று இரவு 8 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆதிவாசிகள் குடியிருப்பான மாவநத்தம் என்ற அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் குடியிருப்பிற்கு சென்றார்.
அப்பொழுது அங்குள்ள மக்களிடம் கலந்துறவாடும் போது மருத்துவ சேவைப் பற்றி கோரிக்கை வைத்தனர்.
தமிழர் தலைவர் உடனே அங்குள்ள மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஆணையிட்டுள்ளார்.
கோபி மாவட்டத் தலைவர் தோழர் சென்னியப்பன் உடனடியாக செய்கிறோம் என்ற உறுதியளித்தார்.
பெரியார் மருத்துவர் அணி உடனடியாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
அந்த முகாமில் திருச்சி ஹர்ஷமித்ரா புற்று நோய் மருத்துவமனையும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி,திருச்சி பகுத்தறிவாளர் கழகத் தோழர் மலர் மன்னன் அவர்களின் மருத்துவ ஆய்வகம் ஆகிய அமைப்புகள் அனைத்தும் இணைந்து ஒரு மாபெரும் மருத்துவ முகாமை மலைவாழ் மக்களுக்கு நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்!
கோபி கழக மாவட்டத் தோழர்கள், பெரியார் மருத்துவ அணித் தோழர்கள் பங்கேற்று முகாமை சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

– மரு.கவுதமன், இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *